Photo by Rogan Yeoh
ஜனநாயக நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் மக்கள் எதைப் பற்றி அக்கறை கொள்கிறார்கள் என்று நாங்கள் அறிய விரும்புகிறோம்
பிரதான ஊடகங்கள் சிங்கப்பூர் தேர்தல்களை மிகவும் அற்பமான முறையில் கவனிக்கின்றன. இந்த முறையினால் தங்கள் பிரச்சனைகள் குறித்து உண்மையான விவாதங்களை விரும்பும் மக்கள் வேற்று மக்கள் ஆகின்றனர். தேர்தல் செயல்முறையில் குடிமக்கள் செயலற்றப் பங்கேற்பாளர்களாக நடத்துகின்றனர். குடிமக்கள் அதை விடச் சிறந்த நடத்தைக்குத் தகுதிபெற்றவர்கள்.
குடிமக்களின் நிகழ்ச்சிநிரலில் பங்கேற்று சிங்கப்பூருக்கு முக்கியமானது என நீங்கள் கருதும் பிரச்சனைகளைக் குறித்து கூறுங்கள்?
எங்கள் செயலெல்லைக்கு வழிக்காட்டுங்கள்
உங்கள் பிரச்சனைகள் எங்களது செயலெல்லையை வழிகாட்ட உதவும் மேலும் நீங்கள் அதைப் பற்றி மேலும் அறிவதை நாங்கள் விரும்புகிறோம். இந்தப் பிரச்சனைகளால் வடிவமைக்கப்பட்ட கட்டுரைகளை நியூ நரடிஃப் எங்கள் அனைத்து வடிவங்களிலும் வெளியிடும், இதனால் நீங்கள் 2025 பொதுத் தேர்தல் குறித்து தகவல் அறிந்து முடிவுகள் எடுக்கலாம்.
எங்கள் ஜனநாயக வகுப்பறைகளில் இணையுங்கள்
நீங்கள் இதற்கு முன்பு வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காத எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு இடம் தான் நியூ நரடிஃபின் ஜனநாயக வகுப்பறைகள். சிங்கப்பூர் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகள் சார்ந்த விவாதங்களில் இணைந்து அரசியல்ரீதியாக ஈடுபாட்டுடன் இருங்கள்.
மிக முக்கியமான பிரச்சனைகளை வரிசைப்படுத்துங்கள்
கட்டம் 2 இல், எங்கள் கருத்துக்கணிப்பில் இருந்து அறியவரும் முக்கியமானப் பிரச்சனைகளைப் பகிர்ந்து, சிங்கப்பூர் நாடு சந்திக்கும் 5 மிக முக்கியமான பிரச்சனைகளைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தக் கேட்போம். உங்கள் வாக்கை அளித்து எதிர்காலத்தை வடிவமையுங்கள்!
ஈடுபாட்டுடன் இருங்கள்
எங்கள் பொதுக் கருத்துக்கணிப்பில் பதிலளிக்க உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழையுங்கள். எங்கள் வாராந்திர செய்தியறிக்கைக்குப் பதிவு செய்வதன் மூலம் வரவிருக்கும் ஜனநாயக வகுப்பறைகள் பற்றி அறிந்திருந்து அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகத் தேவையானத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாசிப்புப் பட்டியல்களைப் பெறுங்கள்.
2019 இல் உங்கள் கவலை என்னென்ன?
2019 இல் உங்களைக் கவலைக்கொள்ள வாய்த்த பிரச்சனைகள் குறித்து எங்களிடம் கூறினீர்கள். அப்பொழுதிலிருந்து சிங்கப்பூர் எப்படி மாறியுள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
வீடு மற்றும் வேலைவாய்ப்பில் சிறும்பான்மை இனத்திற்கு எதிராக நடக்கும் பாகுபாட்டை நிறுத்த என்ன செய்யப்படும்?

Nabilah Husna
தகவல் தொடர்பு அலுவலர்அதிகரிக்கும் கடல்மட்டம் மற்றும் அதிகரித்த வெப்ப அழுத்தம் போன்று வரவிருக்கும் வானிலை பிரச்சனைகளை நாம் எவ்வாறு சமாளிப்பது?

Yew Leong
பொறியாளர்ஆதாரம் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, மனிதநேயம் கொண்ட சிறந்த மருந்துக்கொள்கைகள் எவ்வாறு இருக்கும்?

Shaik Syasya
வலை வடிவமைப்பாளர் (வெப் டிசைனர்)மக்களுக்கு முக்கியமானப் பிரச்சனைகள். வேலைவாய்ப்பு, மலிவானப் பொருட்கள் மற்றும் மருத்துவ, இன சமன்பாடு மற்றும் LGBTQ உரிமைகள்.

Saroja Dorairajoo
மூத்த விரிவுரையாளர், NUSஉண்மையில் முன்னேறும் நாட்டை உருவாக்க நமது நிர்வாகத்தில் குடிமக்களும் அரசும் வெளிப்படைத்தன்மையை எவ்வாறு உருவாக்க முடியும்?

Rachel Loh
புகைப்படக்கலைஞர் & கலை இயக்குனர்ஊடக, வெளிப்பாடு மற்றும் தகவல் சுதந்திரத்தில் உங்கள் கொள்கைகளை எந்தெந்த கோட்பாடுகள் நிர்வகிக்க வேண்டும்?

Isabelle Lim
பத்திரிகையாளர்குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் 2019 ஐ நாங்கள் எப்படி நடத்தினோம் என்று அறியுங்கள்:

குடிமக்கள் நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியாகுங்கள்
“சிங்கப்பூரில் பல விஷயங்கள் தவறாக இருக்கின்றன, நான் என்ன செய்வது?” என்கிற பொதுவானக் கேள்விக்கான விடை தான் நியூ நரடிஃப். சிறந்த உலகத்தை உருவாக்க நம்மால் உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், அதனால் பிரச்சனைகளை உங்கள்பார்வைக்குக் கொண்டு வரும் தகவலைத் தருவது மட்டுமல்லாது எங்களது சமூக ஈடுபாடு மற்றும் ஒருங்கிணைந்தத் தீர்வுகளைத் தேடி குடிமைப் பங்கேற்றல் மூலம் மக்களையும் ஒன்றும் சேர்க்கிறோம்.
குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் மூலம், சமுதாயமான நீங்கள் அக்கறை கொள்ளும் பிரச்சனைகள் மீது தேர்தல் கவனம் செலுத்த உதவுகிறோம். சிங்கப்பூர் குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் இவ்வாறு வேலை செய்யும்:
கட்டம் 1: கருத்துக்கணிப்பை எடுங்கள்
தொழில்முறை கருத்துக்கணிப்புத் தளத்தை உபயோகித்து சிங்கப்பூரில் 1,200 நபர்களிடம் கருத்துக்கணிப்பை நடத்துவோம். உங்கள் கருத்துப்படி, சிங்கப்பூரில் முக்கியமாகக் கருதும் பிரச்சனைகள் எவை? வரவிருக்கும் அடுத்தப் பொதுத் தேர்தல்களில் உங்கள் வாக்குகளுக்குப் போட்டியிடும் பொழுது வேட்பாளர்கள் பேச வேண்டியவை என நீங்கள் கருதுவது எதை? இந்தத் தளத்தை உபயோகிப்பதால் சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் புள்ளியியல் சார்ந்த பிரதிபலிப்பு மாதிரிகளை நாம் பெறுவோம்.
அதே நேரம், நமது நியூ நரடிஃப் சமுதாயத்தில் இருந்தும் நாங்கள் கேட்க விரும்புகிறோம். அதே கேள்விகளை ஒரு பொதுக் கருத்துக்கணிப்பு மூலம் பதிலளிக்க உங்களை அழைப்போம்.
பின்னர் இரு குழுக்களின் (தொழில்முறை கருத்துக்கணிப்பு மாதிரி மற்றும் பொது சமுதாயம்) பதில்களைத் தனித்தனியாக ஆய்வு செய்து ஒரு பட்டியலைத் தயார் செய்வோம்.
கட்டம் 2: முக்கியப் பிரச்சனைகளை வரிசைப்படுத்துதல்
எங்கள் கருத்துக்கணிப்பில் இருந்து அறியவந்த முக்கிய பிரச்சனைகளைப் பகிர்ந்து, இரு குழுவில் இருபவர்களிடமும் சிங்கப்பூரில் அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய பிரச்சனைகளைத் தேர்ந்தெடுக்கச் சொல்வோம்.
கட்டம் 3: பிரச்சனைகளைப் புரிந்துக்கொள்ளுதல்
இரு கருத்துக்கணிப்பில் இருந்து நாங்கள் கண்டறிந்ததை வெளியிடுவோம். இந்தப் பிரச்சனைகளை மக்கள் நன்றாகக் புரிந்துகொள்வதற்கு கட்டுரைகள், பாட்கேஸ்ட்டுகள் மற்றும் விளக்கங்களை உருவாக்குவோம்.
கட்டம் 4: ஜனநாயக வகுப்பறையில் பங்குபெருங்கள்
எங்கள் கண்டறிதல்கள் மற்றும் ஆதாரங்களை உபயோகித்து, அடுத்த தேர்தலுக்கு நமது சமுதாயத்தை அறிவுறுத்தி ஆற்றலூட்ட ஜனநாயக வகுப்பறைத் தொடர்களை உருவாக்குவோம்.